இந்த உணவுகளை எல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாது? மீறி சாப்பிட்டால் விஷமாக கூட மாறலாம்!



foods-not-to-reheat-for-health

மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத சில உணவுகள்

நம் ஆரோக்கியம் என்பது நாம் எடுக்கும் உணவின் தரத்தையும், அதை எப்படி உண்பதையும் சார்ந்தது. இன்று வீட்டில் மீண்டும் சூடு செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்திருப்பது கவலைக்கிடமான ஒன்று. எல்லா உணவுகளையும் மீண்டும் சூடாக்குவது பாதிப்பு இல்லாதது அல்ல. சில உணவுகள், மீண்டும் சூடாக்கும் போது விஷப் பொருட்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

மீண்டும் சூடு செய்யக்கூடாத உணவு

சாதம் மீண்டும் சூடாக்குவதில் இருக்கும் ஆபத்து

சாதம் என்பது பலரின் முதன்மை உணவாக உள்ளது. ஆனால், சமைத்த சாதத்தில் Bacillus cereus எனும் பாக்டீரியா ஸ்போர்கள் இருந்துவிடும். இதனை சரியாக குளிரூட்டாமல் வைக்கும்போது, மீண்டும் சூடு செய்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. சாதத்தை மீண்டும் சாப்பிட நினைத்தால், ப்ரிட்ஜில் மூடி வைத்து சேமித்து, சூடு செய்யும் போது நன்கு கிளறிவிட்டு வைப்பது அவசியம்.

மீண்டும் சூடு செய்யக்கூடாத உணவு

உருளைக்கிழங்கு சூடு செய்தால் ஏற்படும் பாதிப்பு

வெந்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடு செய்தால் அது நஞ்சு தன்மையுடன் மாறிவிடும். இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இதையும் ப்ரிட்ஜில் பாதுகாப்பாக வைத்திருப்பதும், தேவையான அளவுக்கு மட்டுமே மீண்டும் சூடு செய்வதும் நல்லது.

இதையும் படிங்க: மாதவிடாய் நாட்களிலும் முடிந்த அடுத்த நாளும் பெண்கள் என்னென்ன சாப்பிடணும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...

மீண்டும் சூடு செய்யக்கூடாத உணவு

கீரைகளை மீண்டும் சூடு செய்யக்கூடாத காரணம்

கீரை வகைகள் குறிப்பாக பசலைக்கீரை போன்றவை மீண்டும் சூடு செய்யும் போது அதிலுள்ள நைட்ரேட் என்பது நைட்ரோசமைன்கள் ஆக மாறி புற்றுநோயைத் தூண்டும். அதனால், கீரைகளை மீண்டும் சூடு செய்யாமல், ஒரே நேரத்தில் சாப்பிடுவது பாதுகாப்பான வழி ஆகும்.

சில உணவுகளை மீண்டும் சூடு செய்வது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அவை ஆரோக்கியத்துக்கு நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மேற்சொல்லப்பட்ட உணவுகளை மீண்டும் சூடு செய்ய வேண்டுமென்றால், சரியான முறையில் பாதுகாத்து, நேரத்திற்கு ஏற்ப உபயோகப்படுத்துவது மிகவும் முக்கியம். 

 

இதையும் படிங்க: வீட்டில் பல்லி, கரப்பான்,எறும்பு தொல்லையை நீக்க இயற்க்கை முறையில் ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ! பார்த்து பயன்பெறுங்கள்...