வீட்டில் பல்லி, கரப்பான்,எறும்பு தொல்லையை நீக்க இயற்க்கை முறையில் ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ! பார்த்து பயன்பெறுங்கள்...



natural-lizard-ant-repellent-kitchen-ingredients

இயற்கையான முறையில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டும் எளிய வழி

வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் தொல்லையளிப்பது சாதாரணம்தான். ஆனால், இவற்றை விரட்ட வேறு வழி இல்லையா என்று யோசிக்க வேண்டியதில்லை. இயற்கையாகவும் பாதுகாப்பாகவும் நீங்கள் வீட்டிலேயே ஒரு எளிய கரைசலை தயார் செய்யலாம்.

பல்லி விரட்டும் மருந்து

தேவையான பொருட்கள்

இந்த எளிய மருந்தை தயாரிக்க கீழ்க்கண்ட சமையலறை பொருட்கள் தேவைப்படும்:

வெற்றிலை – 1

பூண்டு – 2 பற்கள்

வினிகர் (சமையலுக்கானது) – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

பயன்பாடற்ற மாத்திரைகள் (பாராசிட்டமால்/டோலோ போன்றவை)

பிஸ்கட் தூள்/பிரட் தூள்/கேக் தூள் – சிறிதளவு

தயாரிக்கும் முறை

1. ஒரு மிக்ஸியில் பூண்டை நன்றாக நசுக்கவும்.

2. அதில் வெற்றிலை சேர்த்து அரைக்கவும்.

3. இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சூடான நீர் சேர்க்கவும்.

4. வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.

5. இதை 2 மணி நேரம் மூடி வைக்கவும்.

6. பின்னர் வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் நிரப்பவும்.

பல்லி விரட்டும் மருந்து

பயன்படுத்தும்  முறை

சமையலறை வேலை முடிந்ததும், இந்த இயற்கை ஸ்பிரேயை பல்லி, கரப்பான், எறும்பு அதிகம் காணப்படும் இடங்களில் தெளிக்கவும். இதனால் எந்தவொரு ரசாயனமுமின்றி உங்கள் வீட்டில் இருந்து பூச்சிகளை பாதுகாப்பாக விலக்கலாம்.

இதையும் படிங்க: குக்கர் கைப்பிடி அடிக்கடி கழண்டு வருதா? அப்போ இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...

இது ஒரு 100% இயற்கையான மற்றும் செலவில்லா தீர்வு என்பதால், உங்கள் குடும்பத்திற்கு எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாமல் சுகாதாரமாக வீடை பாதுகாக்க முடியும்.

இதையும் படிங்க: அதிகமாக தண்ணீர் குடித்ததால் உயிர்யிழந்த பெண்! நீர் நச்சுத்தன்மையைப் பற்றி முழுமையாக விளக்கம்! மருத்துவர்களின் எச்சரிக்கை...