என்ன மன்னிச்சிருங்க ஆச்சி..! தம்பி, தங்கச்சி ரொம்ப பாவம்..! சிக்கிய உருக்கமான கடிதம்..! துடிதுடித்து போன குடும்பம்..!

தேர்வில் தோல்வியடைந்ததால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி மருதக்கனி. இவர்களுக்கு மாரியம்மாள் (18) என்ற மகளும், விக்னேஷ் (15), மகாராஜன் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மாரியம்மாள் சங்கரன்கோவிலில் உள்ள தனது பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கி இருந்து தட்டச்சு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், சாமி கும்பிடுவதற்காக காளியம்மாள் பக்கத்துக்கு ஊர் கோவிலுக்கு செல்ல, மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு பாட்டி இரவு 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டில் பேத்தி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியைடைந்துள்ளார்.
பேத்தி காணவில்லை என காளியம்மாள் உறவினர்களிடம் கூற, அனைவரும் மரியம்மாளை தேடியுள்ளனர், இதனை அடுத்து மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் மாரியம்மாள் சடலமாக கிடப்பதாக தகவல் வர, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மாறியம்மாளின் உடலை கைப்பற்றினர்.
இந்நிலையில், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தன்னால் முடிந்த அளவுக்கு படிச்சு பார்த்தும் முடியவில்லை, அதனால் தற்கொலை செய்துகொள்வதாக மாரியம்மாள் எழுதியிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.