தமிழகம்

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

young girl abused

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி மர்மநபர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல் சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பியபின் தோழிகளுடன் விளையாடச் சென்றுள்ளார்.

விளையாட சென்ற சிறுக நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பல பகுதிகளில் தேடினர். சிறுமி எங்குமே காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அந்த ஊரில் உள்ள முட்புதர்களுக்கு நடுவே சிறுமி ஒருவர் ஆடைகள் கிழிக்கப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதியினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்துகிடந்தாக சிறுமி மர்ம நபர்களால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட சிறுமி காணாமல் போன  8 வயது சிறுமி என்பது தெரியவந்தது. 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்தநிலையில் உயிரிழந்த சிறுமியின் கிராம மக்கள், உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளியை பிடிப்பதாக கூறி பொதுமக்களை சம்மாதான படுத்தினர்.


Advertisement