ஐயோ பாவம்... ஆன்லைனில் கடன்.! செய்வதறியாமல் தவித்த வாலிபர்.! பரிதாபமாக போன உயிர்.!



young-boy-suicide-for-online-money

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த நரேந்திரன் என்ற வாலிபர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை நரேந்திரனின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த நரேந்திரன் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். அந்த சமயத்தில் நரேந்திரனின் தந்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது நரேந்திரன் செல்போனில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை.

இதனால் நரேந்திரனின் மாமாவை வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து நரேந்திரனின் மாமா உடனடியாக அவர் வீட்டுக்கு சென்று நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நரேந்திரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நரேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நரேந்திரன் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகளின் மூலம் பல ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடனை உடனடியாக திரும்ப கட்டச்சொல்லி நரேந்திரனுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. 

பணத்தை திருப்பி கட்டாவிட்டதால் அவரது உறவினர்கள் செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டு நரேந்திரன் வாங்கிய கடனை திரும்ப கட்டும்படி வற்புறுத்தி வந்தனர். இதனால் விரக்தி அடைந்த நரேந்திரன், தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், நரேந்திரனை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.