தமிழகம்

12 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்.! 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்.! பள்ளி மாணவிகளை குறிவைத்த வாலிபர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபி (வயது 19) என்ற வாலிபர். அதேபகுதியி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபி (வயது 19) என்ற வாலிபர். அதேபகுதியில் வசித்துவரும் 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாகவும், உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவியை, தனது வீட்டுக்கு அபி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், அபி தன்னை  திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் மாணவி இருந்துள்ளார். ஆனால் அபி அவரை ஏமாற்றி விட்டு மற்றொரு 10 ஆம் வகுப்பு மாணவியுடன் ஓடியுள்ளார். இதுகுறித்து 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தெரிய வந்தது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தன்னை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த மாணவி.

அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் அபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் அபியுடன் ஓடிய மாணவியின் தாயாரும் எனது மகளை அபி கடத்தி சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு மாணவியை தன் வீட்டிலேயே அபி தங்க வைத்து இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அபியை அதிரடியாக கைது செய்து, மாணவியை மீட்டனர்.
 


Advertisement