கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்..! அதிர்ச்சி காரணம்.!

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்..! அதிர்ச்சி காரணம்.!


young-boy-attacked-young-girl

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள விட்டலபுரியில் ஜவுளி கடை நடத்தி வருபவர் ராஜா. இவரது ஜவுளி நிறுவனத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜவுளி கடையில் வேலை செய்து கொண்டிருந்த பிரதீப், உரிமையாளரின் வீட்டிற்குச் சென்று ராஜாவின் மகள் கோகில வாணியிடம் ஒரு காகிதத்தை கொடுப்பது போல் நடித்து அந்த காகிதத்தை கீழே தவறவிட்டுள்ளார்.

அப்போது கல்லூரி மாணவியின் நகையை பறிக்க முயன்றுள்ளான் பிரதீப். அப்போது, மாணவி தடுத்ததால் அவரது கழுத்து, வயிறு, கன்னம், கால் உள்ளிட்ட பகுதிகளில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். வலியால் துடித்த கோகிலவாணி அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வெளியே ஓடிவந்த பிரதீப்பை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

young girl

பிரதீப்பை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த கோகிலவாணி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.