தமிழகம்

ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் கைது!

Summary:

young boy arrested for sharing a child pornography


சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் ஆபாசப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே சைபர் கிரைம் போலீசாரின் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனு என்பவர், சிறார் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாக, குழந்தைகளுக்கான தேசிய மையம், தமிழக சைபர் கிரைம் ஏடிஜிபியிடம் புகார் அளித்தது. 

அந்த புகாரின் பேரில் போலீசார் சீனுவை தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்தனர். கைது செய்யப்பட்ட நியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அந்த நபரிடம் இருந்த செல்போன் மற்றும் மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


Advertisement