தமிழகம்

பொண்ணு பார்க்கத்தான் இப்படி..!! ஆபாச புகைப்படத்தை வைத்து செஞ்ச காரியம் இருக்கே.!! பரபரப்பு சம்பவம்..

Summary:

பொண்ணு பார்க்கத்தான் இப்படி..!! ஆபாச புகைப்படத்தை வைத்து செஞ்ச காரியம் இருக்கே.!! பரபரப்பு சம்பவம்..

திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வழக்கில் இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவணந்தபுரத்தை சேர்ந்த திருமணம் ஆன இளம் பெண் ஒருவரின் ஆபாச புகைப்படம் பேஸ்புக், வாட்சப் ஆகியவற்றில் உலா வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், புகைப்படம் பகிரப்பட்ட வாட்சப் எண்ணை வைத்து மிபின் ஜோசப் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், செளமியா என்ற இளம்பெண் கூறியதன் பேரில் தான் இவ்வாறு செய்ததாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்தார்.

உடனே செளமியா-வை கைது செய்த போலீசார், அவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட திருமணமான பெண்ணின் கணவர் செளமியாவின் முன்னாள் காதல் என்றும், செளமியாவிடம் பணம் பெற்று அந்த பணத்தை திரும்பத் தராததால் அவரை பழிவாங்கவே இப்படி செய்ததாக செளமியா போலீசாரிடம் கூறியுள்ளார்.

திருமணப் போட்டோக்களில் இருந்து போட்டோவை எடுத்து அதனை விவின் ஜோசப் உதவியுடன் மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார் செளமியா. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement