
வங்கதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் பயணி, மாரடைப்பால் விமானத்திலேயே உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் பயணி, மாரடைப்பால் விமானத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை விமான நிலையத்துக்கு வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் இதய நோயாளியான டாக்காவைச் சோ்ந்த சலினாபேகம் என்ற 53 வயது பெண் சிகிச்சைக்காக தனது மகன், மகள் ஆகியோருடன் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சலினாபேகத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவர் வலியால் துடிப்பதை கண்ட விமான பணிப்பெண்கள், இதுபற்றி விமானிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.இதனையடுத்து அந்த விமானம், நேற்று பிற்பகல், 3:15 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது. அப்போது தயாராக இருந்த மருத்துவ குழுவினர், சலினா பேகத்தை விமானத்திற்குள் சென்று பரிசோதித்தனர்.
ஆனால் அவா் இருக்கையில் சாய்ந்தபடி உயிரிழந்து இருந்தாா். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனா். இதையடுத்து விமான நிலைய போலீசாா், சலினாபேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement