மருத்துவரை மயக்கிய இளம் பெண்! இறுதியில் மருத்துவர் எடுத்த அதிரடி முடிவு!Women blackmailed doctor with hidden videos in chennai

தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்ச்சி அடைந்தாலும் அதை சார்ந்த குற்றங்கள் மறுபக்கம் வளர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில் தன்னிடம் நெருக்கமாக இருந்த மருத்துவரின் விடீயோக்களை காட்டி வேலைக்கார பெண் ஒருவர் பணம் பறித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆண் மருத்துவர் ஒருவர் மனைவி மட்டும் உறவினர்கள் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் வீட்டு வேலைக்காக இணையம் மூலம் ஆள் தேடியுள்ளார் அந்த மருத்துவர்.

இதனை சாதகமா பயன்படுத்திக்கொண்ட பெண் ஒருவர் மருத்துவரிடம் வேலைக்கு சேர்ந்து அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த பெண் வீடியோவை மருத்துவரிடம் காட்டி பணம் பறித்துள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் நச்சரிப்பு தாங்க முடியாத மருத்துவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்த வீடியோவை கைப்பற்றினர். மேலும் அந்த பெண் இதேபோன்று ஆன்லைனில் பலரிடம் வேலைக்குச் சென்று நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரிய வந்ததுள்ளது.