தமிழகம்

நடைபயிற்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெண் கேட்ட ஒற்றை கேள்வி.! மொத்தபேரும் வாய்விட்டுச் சிரித்த சம்பவம்.!

Summary:

நடைபயிற்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெண் கேட்ட ஒற்றை கேள்வி.! மொத்தபேரும் வாய்விட்டுச் சிரித்த சம்பவம்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சைக்கிளிங் செல்லும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகும். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை அடையாறு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் உரையாடினார்.

அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், திமுக ஆட்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. இது இப்படியே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 


மேலும், அப்பெண் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், நீங்கள் என்றும் மார்க்கண்டேயன் போலவே இருக்கிறீர்கள். அது எப்படி? என கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement