கள்ளக் காதலின் உச்சம்! பக்காவா திட்டம் தீட்டி கணவரை தீர்த்து கட்டிய மனைவி! சினிமாவையும் மிஞ்சிய கொடூரம்!!



wife-killed-husband-for-illegal-affair

தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அபிராமிக்கு காளிராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் திடீரென காளிராஜ் மாயமானார். பின்னர் தனது மகனை காணவில்லையே என அவரது அம்மா அபிராமியிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக கூறியுள்ளார். ஆனால் நீண்டநாட்களாகியும் காளிராஜ் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அம்மா அதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார்.

illegal affair

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது காளிதாஸை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த அபிராமிக்கு மாரிமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காளிதாஸ்க்கு தெரியவந்த நிலையில் அவர் அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் காளிதாஸை கொல்ல திட்டமிட்டு பாலில் மயக்க மருந்து கொடுத்து  பின் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் முருகேசன் என்பவரது உதவியுடன் வீட்டு வளாகத்திலேயே குழிதோண்டிப் புதைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார்கள் அபிராமி, மாரிமுத்து மற்றும் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.