கள்ளகாதலின் உச்சம்.! கணவனை அரிவாள்மனையால் வெட்டி துடி துடிக்க கொலை செய்த மனைவி.! பரிதவிக்கும் அப்பாவி மகன்.!

கள்ளகாதலின் உச்சம்.! கணவனை அரிவாள்மனையால் வெட்டி துடி துடிக்க கொலை செய்த மனைவி.! பரிதவிக்கும் அப்பாவி மகன்.!


wife killed her husband

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு விமலா ராணி என்ற மனைவியும், 14 வயதில் மகனும் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே விமலா ராணிக்கு ராஜா என்பவருடன் காதல் உண்டாகி அவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். 

ஆனால் பெற்றோரின் விருப்பப்படி தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டுள்ளார் விமலா ராணி. தங்கவேலுவை திருமணம் செய்து கொண்ட பிறகும் ராஜா உடனான தொடர்பை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார் விமலா ராணி. கடந்த14 வருடங்களாக கணவர் தங்கவேலுக்கு இதுகுறித்து தெரியவில்லை. 

தற்போது இதுகுறித்து சந்தேகப்பட்ட தங்கவேலு விமலா ராணியிடம் இதைக் கேட்டு கண்டித்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் இருக்கும் வரை காதலன் ராஜாவுடன் இனி தொடர்புகொள்ளமுடியாது என நினைத்து தங்கவேலுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் காதலன் ராஜாவை வரவழைத்து தங்கவேலுவிவின் சடலத்தை அப்பகுதியில் உள்ள ஒரு ஏரியில் வீசியுள்ளனர்.

Murder

இந்நிலையில், சமீபத்தில், தங்கவேலுவின் செல்போனுக்கு அவரது சகோதரர் சக்திவேல் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போனை எடுத்த விமலா ராணி தனது கணவரின் செல்போனை , தற்போது தனது மகன் ஆன்லைன் வகுப்பிற்கு பயன்படுத்தி கொண்டு இருப்பதாக கூறி போனை வைத்துள்ளார். அதன் பின் மீண்டும் மற்றொருநாள் செல்போனை தொடர்பு கொண்ட போது, அந்த போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக்திவேல், உடனடியாக சகோதரரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டுள்ளார். இதையடுத்து, தங்கவேலின் தந்தை, தனது மகன் குடும்பத்தில் யாரையும் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் ஆஜர் ஆனார். இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், விமலாராணி மற்றும் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். தாய் செய்த கொடூர செயலால் தற்போது 14 வயது மகன் தந்தையை இழந்து தனிமரமாக நிற்கின்றார்.