தமிழகம்

கணவன் மீது மனைவி பாலியல் கொடுமை புகார்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Summary:

wife complaint on her husband

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவரின் மனைவி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'சுப்பிரமணியன் என்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டார்' என்றும், பெற்றோர் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்த பின் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்கிறார் என்றும் புகார் அளித்திருந்தார். 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பத்தூர் மகளிர் காவல் துறையினர் சுப்பிரமணியனைக் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கை விசாரித்த வந்த மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணியனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இதனையடுத்து மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் மேல் முறையீடு செய்திருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது, சுப்பிரமணியனும் அவரது மனைவியும் 18 வயதுக்கு பிறகே உறவு வைத்திருந்தது நிரூபிக்கப் பட்டது.

இதனால், சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சுப்பிரமணியனின் மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


Advertisement