துக்க வீட்டிற்கு வந்து, நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளியல்.. பரிதாபமாக உயிரிழந்த பெண்மணி.!



Virudhunagar Rajapalayam S Ramalingapuram Woman Died Well

கரூரில் இருந்து துக்க வீட்டிற்கு வந்த பெண்மணி, கிணற்றில் குளிக்க செல்கையில் நீரில் மூழ்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், எஸ். இராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். இவர் தனது கணவர் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வருகிறார். 

சகோதரர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சிக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முத்தம்மாள் எஸ். இராமலிங்கபுரம் வந்துள்ளார். இந்நிலையில், முத்தம்மாள் தனது உறவினர்களுடன் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். 

Virudhunagar

அப்போது, முத்தம்மாளுக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவர் படியில் அமர்ந்து குளித்துக்கொண்டு இருக்கையில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். அவருடன் சென்ற பெண்களுக்கும் நீச்சல் தெரியாத நிலையில், பிறரை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் முத்தம்மாள் நீரில் மூழ்கி இருக்கிறார். 

இதனையடுத்து, இது தொடர்பாக இராஜபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், முத்தம்மாக்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.