திருமணம் செய்த 2 மாதத்தில் பிரிவு, 4 மாதத்தில் தற்கொலை.. பெண்ணின் வாழ்க்கையை முடித்த காதல்..!



Virudhunagar Rajapalayam Girl Dies By Suicide 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், இனாம் செட்டிகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரின் தங்கை முத்துலட்சுமி (வயது 25). நர்சிங் பயின்று இருக்கிறார். 

இராஜபாளையம் மேல் ஆவாரணத்தை பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். முத்துலட்சுமி - கோபிநாத் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவரின் அதிர்ச்சி செயல்.!

காதல் திருமணம்

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமி - கோபிநாத் வீட்டில் இருந்து வெளியேறி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். 

Virudhunagar

பின் இருவரும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வந்தனர். 2 மாதங்கள் ஒன்றாக வசித்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

கருத்து வேறுபாடு பிரிவு & தற்கொலை

இதனால் காதல் கணவரை பிரிந்த முத்துலட்சுமி, ராஜபாளையத்தில் உள்ள தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், பெரியப்பா வீட்டிற்கு சென்று வருவதாக கூறியவர், ஸ்ரீவில்லிபுத்தூர் கொழிஞ்சி பகுதியில் இருக்கும் பெரியப்பாவின் வீட்டில் வந்து இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 19 வயதுக்குள் கர்ப்பமாகும் இளம்பெண்கள்... வெளியான தகவல்.!