19 வயதுக்குள் கர்ப்பமாகும் இளம்பெண்கள்... வெளியான தகவல்.!

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண்களின், 19 வயதுக்குள் தாய்மை அடையும் பெண்களின் எண்ணிக்கையானது ஆண்டில் 700 முதல் 800 வரை அதிகரித்துளளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்து இருக்கிறார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வளரிளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மென்ஸ்ட்ரூபியா காமிக் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், "நன்கு வளர்ச்சியடைந்த விழிப்புணர்வு உள்ள மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 200 - 300 குழந்தைகள் திருமணம் நடக்கிறது. இதுதொடர்பாக புகார் பெறப்படுகிறது.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளில் 9 குழந்தைகள்.. 10 வது பிரசவத்திற்கு தயாரான நாமக்கல் பெண்..!
அதேநேரத்தில், 19 வயதுக்குள் இருக்கும் பெண்களில், தாய்மை அடையும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 700 முதல் 800 உயர்கிறது. இது கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷத்தை உறுதி செய்கிறது. பதின்ம வயதில் ஏற்படும் உளவியல், உடல் மாற்றங்கள் குறித்து புரிந்துகொள்ளுதல் தேவை.
பெண்களின் முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக மாறி இருக்கிறது. அரசு, தனியார் துறையில் பெண்கள் அதிகம் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி; பள்ளி வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்.!