கசிந்தது தவெக வின் தேர்தல் அறிக்கை! ஃப்ரீ பஸ் முதல் ₹10 லட்சம் காப்பீடு வரை! மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு தெரியுமா? விஜய்யின் அதிரடி லிஸ்ட்!!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளைத் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 திட்டம்?
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தவெக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளைச் சேர்க்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகையை விட அதிகமாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்ற திட்டம் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து பயணம் மற்றும் காப்பீட்டு திட்டம்
இதனுடன், சென்னையில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்குவது, மாநகராட்சிப் பேருந்துகளில் இருபாலருக்கும் இலவசப் பயணம் ஏற்படுத்துவது போன்ற திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. மேலும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான ‘அண்ணா காப்பீட்டுத் திட்டம்’ வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்கள்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையிலும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல திட்டங்களை தவெக வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்குவது மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனிப்பட்ட நிதி உதவி வழங்குவது போன்ற திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
மாவட்டம் தோறும் நீட் பயிற்சி மையம்
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மருத்துவக் கல்வி விரும்பும் மாணவர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நடிகர் விஜய், பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெறும் நோக்கில் இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுக வின் அதிரடி வாக்குறுதியால் உயர போகும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.....! பதிலடி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!