தமிழகம்

விழுப்புரத்தில் தாய்-மகள் கொலை வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. சைக்கோ காமுகன் பரபரப்பு வாக்குமூலம்.!

Summary:

விழுப்புரத்தில் தாய்-மகள் கொலை வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. சைக்கோ காமுகன் பரபரப்பு வாக்குமூலம்.!

களித்திராம்பட்டு அருகே தாய் - மகள் உறங்கிக்கொண்டு இருக்கையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் பலாத்காரம் செய்ததும் உறுதியானது. கொலையாளியான சைக்கோ இளைஞனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், களித்திராம்பட்டு கண்டசாவடி கிராமத்தை சார்ந்தவர் தட்க்ஷிணா மூர்த்தி. இவரது மனைவி சரோஜா (வயது 75). கடந்த சில வருடத்திற்கு முன்னர் தட்க்ஷிணா மூர்த்தி உயிரிழந்துவிட்ட நிலையில், சரோஜா தனது மூத்த மகள் பூங்காவனத்துடன் (வயது 55) வசித்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று, சரோஜா மற்றும் பூங்காவனம் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தாய் - மகளை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அணிந்திருந்த நகையும் மாயமாகி இருந்தது. 

மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, கொலையாளியை கைது செய்ய தனிப்படையும் களத்தில் இறங்கியது. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர், ஒட்டநந்தல் காலனியை சார்ந்த கவிதாஸ் (வயது 30) என்ற நபரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், கண்டமங்கலம் தாய் - மகள் கொலையை அரங்கேற்றியததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், நகைகளையும் நானே கொள்ளையடித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

கவிதாசை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாய் - மகள் பிரேத பரிசோதனையில் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

இந்த விஷயம் குறித்து டி.ஐ.ஜி பாண்டியன் தெரிவிக்கையில், "கண்டமங்கலம் அருகே தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், கவிதாஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்த விசாரணையில், கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

கவிதாஸ் தனியாக இருக்கும் வயதான பெண்களை தாக்கி கொலை செய்து அல்லது மயக்க நிலையில் இருக்கையில், சைக்கோ போல அவர்களை பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்களின் நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து செல்வார். கடந்த ஜனவரி மாதத்தில் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2 வயதான பெண்களுக்கும் இத்துயரம் நடந்துள்ளது. 

அவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர். கவிதாஸின் மீது திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், சேலம் மற்றும் கடலூர் போன்ற பல காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு பதிவாகி நிலுகையில் இருக்கிறது" என்று தெரிவித்தார். 


Advertisement