ஐயோ.. கடவுளே! வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்து... 10 வயது சிறுவன் பரிதாப பலி..! விழுப்புரம் மாவட்டம் அருகே நடந்த அதிர்ச்சி..!!!



villupuram-gas-cylinder-blast-boy-death

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீரசோழபுரத்தில் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் வீடு முழுவதும் இடிந்து விழுந்ததில், பத்ரிநாத் (10) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனின் பெற்றோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டம்

வீரசோழபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி - சரண்யா தம்பதியினரின் வீட்டில் இன்று காலை சமையல் நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தில் வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் இருந்த 10 வயது சிறுவன் பத்ரிநாத் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தான்.

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் ட்விஸ்ட்... கடலூர் சலூன் கடையில் யாசகம் கேட்ட சிறுமி? ஹேமலதா வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் அதிரவைக்கும் உண்மைகள்..!!!

பெற்றோரை மீட்ட அக்கம்பக்கத்தினர்

வெடிப்புச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டுக்கு ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூர்த்தி, சரண்யா ஆகிய இருவரையும் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடிபாடுகளை அகற்றி சிறுவனின் உடல் மீட்பு

தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 22 நாட்களுக்கு மேல் ஆகிட்டு..! வெவ்வேறு திசைகளில் சென்று மீண்டும் வீட்டுக்கே திரும்பும் விசாரணை...! செஞ்சி சிறுமி வழக்கில் என்னதான் நடந்தது...? நாளுக்கு நாள் அதிர்ச்சி...!!!