ஐயோ... புள்ள! சார்ஜிங் போடப்பட்ட எடை மிஷினை தொட்ட 10 மாத குழந்தை பலி! காப்பாற்ற ஓடிய தந்தைக்கும் பாய்ந்த மின்சாரம்.. கதறும் குடும்பத்தினர்..!!!!
தெலுங்கானா மாநிலம் ஜெக்தியல் மாவட்டத்தில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த எடை பார்க்கும் இயந்திரத்தைத் தொட்ட 10 மாத பெண் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக மின் அதிர்ச்சிக்கு ஆளானது. குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
எடை இயந்திரத்தைத் தொட்ட குழந்தைக்கு மின்சாரம்
ஜெக்தியல் மாவட்டம் ராஜாரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருபதியின் வீட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. சார்ஜ் செய்வதற்காக மின் இணைப்பில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரம், தரையில் இருந்துள்ளது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத பெண் குழந்தை, எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரத்தைத் தொட்டுள்ளது. அப்போது குழந்தை மீது மின்சாரம் பாய்ந்தது.
இதையும் படிங்க: மீன்பிடிக்கச் சென்ற 12 வயது சிறுவன்! பின்னால் துரத்திய எமன்... நொடிப்பொழுத்தில் சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்! அதிர்ச்சி சம்பவம்..!!!
காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் மின்சாரம் பாய்ந்தது
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை, மகளைக் காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சார அதிர்ச்சிக்கு ஆளானார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
முதற்கட்ட விசாரணையில், எடை இயந்திரத்தின் பழுதான மின் இணைப்பு காரணமாக மின்சாரம் கசிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குஷியோ குஷி... ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்...! முதல்வரின் திடீர் சர்ப்ரைஸ்...!!!