சோதனைகளை தாண்டி லண்டனில் மகன் பெற்ற சாதனை! பெற்ற அப்பாவே தடையா? கணவருக்கு ஆப்பு வைத்த ஆர்த்தி...!!!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் ட்விஸ்ட்... கடலூர் சலூன் கடையில் யாசகம் கேட்ட சிறுமி? ஹேமலதா வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் அதிரவைக்கும் உண்மைகள்..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகின்றன. இதுவரை சிறுமி குறித்த எந்த உறுதியான தகவலும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். புவனகிரியில் சிறுமியைப் பார்த்ததாகக் கிடைத்த புதிய தகவல் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை
தொடக்கத்தில் சத்தியமங்கலம் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமியை அக்டோபர் 29 ஆம் தேதி கோயிலில் உயிருடன் பார்த்த அங்கன்வாடி ஊழியர்! சிபிசிஐடியிடம் சிக்கிய அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மை...!!!
இதற்கிடையே, கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் சிறுமியைப் பார்த்ததாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். ஆனால், கரூரில் பார்த்த சிறுமி ஹேமலதா இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
புவனகிரியில் சிறுமியைப் பார்த்ததாக புதிய தகவல்
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி காந்தி சிலை அருகே உள்ள சலூன் கடை பகுதியில், ஒரு பெண்ணுடன் வந்த சிறுமி யாசகம் கேட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனார் அருள்ஜோதி என்பவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். செய்தி சேனலில் ஹேமலதாவின் புகைப்படத்தைப் பார்த்த அவர், சிறுமி குறித்த சந்தேகத்தை காவல் துறையின் உதவி எண்கள் மூலம் உடனடியாகத் தெரிவித்தார்.
இதையடுத்து புவனகிரி காவல் துறையினரும் மாவட்டக் குழந்தை நல ஆலோசகர்களும் அருள்ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. பதிவுகளை முழுமையாகச் சரிபார்த்த பிறகே, அங்கு யாசகம் கேட்ட சிறுமி ஹேமலதாதானா என்பது உறுதியாகத் தெரியவரும்.
பல கோணங்களில் தொடரும் தேடுதல்
மறுபுறம், குற்றப் பின்னணி கொண்டவர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
தீபாவளிக்குள் மகள் வீடு திரும்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில், தாயார் பவானி அவருக்காகப் புதுத் துணிகளை வாங்கி வைத்துக் காத்திருக்கிறார். 25 நாட்களாகத் தொடரும் இந்தத் தேடுதல், ஆலம்பூண்டி கிராம மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 24 நாட்கள் கடந்து கடலூரில் கிடைத்த துப்பு...! நள்ளிரவில் கடந்த லாரிகளை தூக்கிய சிபிசிஐடி...! செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!!