தூங்கி கொண்டிருந்த 14 வயது மகளுக்கு சொந்த வீட்டிலே நடந்த அதிர்ச்சி! சகோதரர்கு போன் போட்டு தந்தை சொன்ன அந்த வார்த்தை... பகீர் சம்பவம்..!!!



villupuram-father-arrested-for-killing-daughter

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதல் விவகாரத்தில் 14 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வி.பரங்கனி கிராமத்தில் அக்டோபர் 29-ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்டி வீட்டில் படித்தபோது ஏற்பட்ட பழக்கம்

வி.பரங்கனி கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சிவசாத்திரி. டிப்பர் லாரி ஓட்டுநரான இவருக்கு விமலா என்ற மனைவியும், 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இளைய மகள் விகாஷினி, கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இதையும் படிங்க: பரபரப்பான செய்திக்காக இப்படியா பண்றது..? 19 நாட்கள் நீடிக்கும் மரண வலி... நான் இருக்குற டென்ஷன்ல கேமராவை புடுங்கி ஒடச்சிருவேன்! செஞ்சி சிறுமியின் தாயார் ஆக்ரோஷம்.. வைரல் வீடியோ..!!!

ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கிப் படித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் விகாஷினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பெற்றோர், காதலைக் கைவிடுமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், விகாஷினி தொடர்ந்து அந்த இளைஞருடன் பேசி வந்ததாகத் தெரிகிறது.

தூங்கிக் கொண்டிருந்த மகளைக் கொன்றதாக புகார்

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், சில மாதங்களுக்கு முன்பு விகாஷினியை சொந்த ஊரான வி.பரங்கனிக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கும் அவர் தொலைபேசியில் காதலனுடன் பேசி வந்துள்ளார். அக்டோபர் 29-ஆம் தேதி தாயார் விமலா வேலூரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விகாஷினியின் கழுத்தை தந்தை சிவசாத்திரி நெரித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை

மகளைக் கொன்றதாகக் கூறப்படும் சிவசாத்திரி, இதுகுறித்து தனது சகோதரர் சசிக்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் வீட்டுக்குச் சென்று சிறுமியை மீட்டு வானூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவசாத்திரியைக் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறே கொலைக்குக் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 18 நாட்கள் கடந்து.. 200 மீட்டர் தொலைவில் சிக்கிய முக்கிய ஆதாரம்! 5 பேரை மடக்கி பிடித்த சிபிசிஐடி... செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!!