அதிர்ச்சி..! ஓடும் காரில் 20 வயது இளம்பெண்ணுக்கு 2 மணி நேரமாக நடந்த கொடூரம்...! கதறி துடித்தும் விடாத கொடுமை... நடுங்க வைக்கும் நள்ளிரவு சம்பவம்..!!!



indore-woman-gang-assault-car-case

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 20 வயது இளம்பெண் ஒருவர் காரில் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. உஜ்ஜைன்-இந்தூர் சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காரில் கொடுமை

பாதிக்கப்பட்ட பெண்ணை காரில் ஏற்றிச் சென்ற இருவர், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஓடும் காரிலேயே பெண்ணை மிரட்டி, தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அய்யய்யோ.... மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி கண்டு ஓடிய தெரு நாய்..! ஷாக் வீடியோ..!!!

மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுத் தப்பிய கும்பல்

இதையடுத்து, இந்தூரில் உள்ள அரவிந்தோ மருத்துவமனை அருகே அந்தப் பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குற்றவாளிகளைத் தேடும் போலீசார்

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகள் சென்ற கார், அவர்கள் பயணித்த வழித்தடம் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: நேற்று மாலை திடீரென மாயமான அரசு ஊழியர்! இன்று ஆற்றில் சடலமாக மீட்பு... பதறவைக்கும் சம்பவம்!!!