நான் திருடலா என்று அலறிய சிறுவன்! அடித்தே கொன்ற ஊர் மக்கள்! கரூரில் பயங்காரம்!

Village people killed a boy in karur


Village people killed a boy in karur

பெற்ற தாய், மற்றும் கூட பிறந்த சகோதரி கண் முன்னே சிறுவனை அடித்துக்கொன்ற பொதுமக்கள்.

கரூரை அருகே உள்ளது அல்லிக்கவுண்டனூர் என்ற கிராமம் சேர்ந்த பழனிசாமி என்பனவருக்கு பாலசுப்பிரமணியம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 15 வயதாகும் பாலசுப்பிரமணியம் படிப்பு வராத காரணத்தால் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. 

நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது, ஊர் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் பாலசுப்பிரமணியம். இதனால் இவரது அன்றாட செலவிற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள வீடு, கடைகளில் தினம் தினம் திருடி தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார் பாலசுப்பிரமணியம்.

murder case

இவரது திருட்டை கையும் களவுமாக பார்த்து சிலர் பெற்றோரிடம் வந்து குறையாகவும், புகாராகவும் சொல்லிவிட்டு போனார்கள். ஆனால் பெற்றோர் எவ்வளவோ கண்டித்தும் பாலசுப்பிரமணியம் திருந்தவும் இல்லை, திருட்டை விடவும் இல்லை. இதனால் சிலர் இவர் மீது கோபத்திலும் பொருட்கள், பணம் இழந்த ஆத்திரத்திலும் இருந்துள்ளனர்.


இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த முனியாண்டி என்பவரின்  வீட்டில் செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முனியாண்டி மற்றும் அக்கம்பக்கத்தினர் இந்த செயலை பாலசுப்பிரமணியம்தான் செய்திருப்பார் என்று எண்ணி உருட்டு கட்டையுடன் பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பாலசுப்பிரமணியம் வீட்டின் முன்பு சென்ற அவர்கள் பாலசுப்பிரமணியத்தை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கையிலிருந்த உருட்டுக் கட்டையால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். வலி பொறுக்க முடியாத சிறுவன், "நான் திருடல... நான் திருடல.." என்று அலறியுள்ளான்.

murder case


ஆனால் அவன் கூறியதை காதில் வாங்காத ஊர் மக்கள் அவனை மேலும் தாக்கியுள்னர். இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணிய மயக்கமானார். இதனால் பதறி துடித்த, அவரது அம்மா தண்ணீர்கொடுக்க வந்தார். ஆனால் அந்த கும்பல் தண்ணீரைகூட குடிக்க விடவில்லை. கடைசியில் பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளியமணை போலீசார் 5 பேரை விசாரணைக்கு கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.