அரசியல் தமிழகம்

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! கூட்டணியில் உடன்பாடில்லை..! கேப்டன் விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளும்  தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தற்போதைய அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 17 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுக்க அதிமுக முன்வந்து உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து  உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து (09.03.2021)அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக  விலகுவதாக விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்


Advertisement