அரசியல் தமிழகம் சினிமா

வெளியான விஜய்யின் முதல்வர் கனவு; உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

Summary:

vijay talks about cm view

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்க்கார். இந்த படத்தினை  வெற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக மீண்டும் யோகிபாபு விஜயுடன் இணைந்துள்ளார்.

sarkar audio launch க்கான பட முடிவு

இந்நிலையில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களால் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து பேசிய விஜய் "சர்க்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை ஒருவேளை நிஜத்தில் நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன்" என தனக்குள் இருக்கும் முதல்வராகும் கனவை ரசிகர்கள் மத்தியில் மிகவும் நாசுக்காக கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் "சர்க்கார் அமைத்து விட்டு நாங்கள் தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தை தான் சொன்னேன். பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள்" என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.


Advertisement