தமிழகம் சினிமா

விஜய் சேதுபதிக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்; மக்கள் செல்வனின் அதிரடி விளக்கம்.!

Summary:

vijay sethupathi replies about fake news

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இது அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அவர் தற்போது நடிப்பதையும் தாண்டி முதன்முதலாக சன்டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நம்ம ஊர் ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

மேலும் சமீபத்தில் மாமனிதன் படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு "பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையாக உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்" என்று விஜய் சேதுபதி கூறியது போன்ற தவறான கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தது.

விஜய் சேதுபதி க்கான பட முடிவு

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, "என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை; பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்" என உறுதிமொழி அளித்துள்ளார். 


Advertisement