கள்ளக்காதலியை நடுரோட்டில் கதறவிட்ட கள்ளக்காதலன்.. பதறியபடி அலறித்துடித்து வந்த மக்கள்.!
கள்ளக்காதலியை நடுரோட்டில் கதறவிட்ட கள்ளக்காதலன்.. பதறியபடி அலறித்துடித்து வந்த மக்கள்.!

சாலையில் கள்ளகாதலியோடு நடந்த பிரச்சனையில் கொலை முயற்சி நடக்க, மக்கள் குவிந்ததால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. கள்ளகாதல் கேடுதரும் என்பதை விளக்க இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, கிளித்தான்பட்டறை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ராஜேஷின் மனைவி திலகா (வயது 28).
ராஜேஷின் நண்பர் சந்தோஷ் (வயது 28). நண்பன் என்ற முறையில் அவ்வப்போது சந்தோஷ் ராஜேஷின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறாக சந்தோஷுக்கு திலகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பழக்கமானது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறவே, கள்ளக்காதல் ஜோடி தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று கள்ளக்காதல் ஜோடி காட்பாடி, காந்திநகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது, இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் எழுந்துள்ளது.
வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த சந்தோஷ் கள்ளக்காதலி திலகாவை தலை, காது பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அவர் படுகாயமடைந்து அலறியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திலகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தோஷை பிடித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.