உடல்நலம் தேறி வீட்டிற்கு திரும்பினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்..!



VCK Thirumavalavan Get Back Home After Treatment  

 

விடுதலை சிறுத்தைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கடந்த செப். மாதம் 25ம் தேதி உடனலக்குறைவு ஏற்பட்டு, வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

அங்கு நடத்த பரிசோதனையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தார். 

இந்நிலையில், கிட்டத்தட்ட 8 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், தொல். திருமாவளவன் பூரண உடல்நலன் பெற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருப்பினும், மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருக்கின்றனர்.