வி.சி.க-வுக்கு ஆப்படித்த திமுக.. ராஜினாமா செய்ய சொல்லுங்கள் - முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை.! 

வி.சி.க-வுக்கு ஆப்படித்த திமுக.. ராஜினாமா செய்ய சொல்லுங்கள் - முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை.! 


VCK President Thirumavalavan MP Request to TN CM MK Stalin

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி, தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவிகள் போன்றவை ஒதுக்கப்பட்டது. இன்று கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.

கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் வி.சி.க வேட்பாளரை எதிர்த்து மனுதாக்கல் செய்ய, திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். வி.சி.க வேட்பாளர் 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 3 செல்லாத வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்திற்கு வி.சி.க-வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

Vck

இதனைப்போல, தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வி.சி.க வேட்பாளர் சின்னவேடி களமிறக்கப்பட்ட நிலையில், திமுக சாந்தி என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்து 8 வாக்கு பெற்று வெற்றி அடைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட, பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 500 க்கும் மேற்பட்ட வி.சி.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி ட்விட்டர் மூலமாக வைத்துள்ள கோரிக்கையில், "திமுக தலைவர், முதல்வர் மு.க ஸ்டாலினின் ஆணையை மீறி, திமுக கழகத்தை சேர்ந்தவர்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவர்கள். அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். கூட்டணி அறம் காக்கப்பட வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.