பாஜகவுக்கு எதிராக சபதம்.. "கொட்டத்தை அடக்குவோம்" - சூளுரைத்த வைகோ உறுதி..! 

பாஜகவுக்கு எதிராக சபதம்.. "கொட்டத்தை அடக்குவோம்" - சூளுரைத்த வைகோ உறுதி..! 


Vaiko Speech at Tiruppur

தோல் கொடுப்பது தோழமையை வளர்க்கும். பாரதிய ஜனதா கட்சியின் கொட்டத்தினை அடக்கும் வீரபூமி தான் தமிழகம் என வைகோ சூளுரைத்தார். 

திருப்பூர் நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில், "பா.ஜ.க அரசு சனாதன அரசு. அது இந்துத்துவா கொள்கையை திணிக்கிறது. ஒரே மொழி, நாடு என்பதையும் திணிக்கிறது. ஒவ்வொரு மதம், மொழிக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். 

vaiko

மாதவெறியுடன் பாஜக சனாதன அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது. நரேந்திர மோடி மக்களுக்கான ஆட்சியை ஒருபோதும் நடத்தவில்லை. அதானி மற்றும் அம்பானி போன்றோருக்கு ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருப்பூரில் சபதம் ஏற்பதே பொருத்தத்துடன் இருக்கும். இது இரத்தம் சிந்திய தியாக பூமி. 

vaiko

இங்கு எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஏற்று சனாதன சக்திகளை, ஒரே மொழி என்று கூறுபவர்களை முறியடிக்க வேண்டும். நாம் அனைவரும் திமுக தலைமையில் இணைந்திருக்கிறோம். ஒருவரோடு ஒருவராக தோள் கொடுத்துள்ளோம். இது தோழமையை வளர்க்கும். பாஜக எங்கு வளர்ந்தாலும் சரி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வளர இயலாது என்பதை  உறுதிப்படுத்த வேண்டிய பணி இருக்கிறது. பாஜகவின் ஆட்டத்தையும் கொட்டதையும் அடக்கும் வீரபூமி தமிழகம்" என்று பேசினார்.