உங்கள் மீனவன் முதுகில் குத்திய துரோகிகள்?.. கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நபர்.. கிறுகிறுக்கவைக்கும் பரபரப்பு தகவல்கள்.!



Ungal Meenavan Company Owner Scammed by Friends 

நம்ம கூட்டத்துடன் நல்லா படிச்சு, ஐடி வேலையில இருக்கான், நல்லபடியா பார்த்துப்பான் என நினைத்ததற்கு, தன்னை சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கவைத்து வாழ்க்கையில் மிகப்பெரிய அடியை உடன் இருந்த, நன்கு தெரிந்த நபரே, சொந்தக்காரர் செய்து இருப்பதாக கிங்ஸ்டன் குற்றசாட்டு முன்வைத்து இருக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன். இவரை உங்கள் மீனவன் என கூறினால் அனைவர்க்கும் தெரியும். கடலுக்குள் மீன்பிடிக்க செல்வத்தையும், மீன்பிடித்து சாப்பிடுவதையும் வீடியோ எடுத்து யூடியூப், முகநூல் ஆகிய பக்கங்களில் பகிர்ந்து அடையாளம் பெற்றவர், பின்னாளில் உங்கள் மீனவன் என்ற நேரடி மீன் விற்பனை கடைகளையும் பல இடங்களில் தொடங்கினார். 

3 ம் வகுப்பு மட்டுமே படித்தாலும், தாய்-தந்தை இன்றி, அக்கா-தம்பி என குடும்பமாக வளர்ந்து, மாமாவின் அரணைப்பால் இளவயது வாழ்க்கையை எதிர்கொண்டு, பல கஷ்டங்களுக்கு நடுவே சமூக வலைத்தளம் வாயிலாக மிகப்பெரிய வெற்றியை அடைந்த நபராக கிங்ஸ்டன் கவனிக்கப்பட்டார். இதனிடையே, கிங்ஸ்டன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கரும்பலகை விழுந்து 2 மாணவர்கள் தலையில் காயம்; வடலூரில் சோகம்.!

அந்த வீடியோவில் கிங்ஸ்டன் பேசியதன் சுருக்கம், "உங்கள் மீனவன் என்ற அடையாளம் நீங்கள் கொடுத்தது. 3 ம் வகுப்பு மட்டுமே படித்த என்னை, என்னுடன் இருந்த நபர் ஏமாற்றி, இன்று உங்கள் மீனவன் அலுவலகத்திற்குள் என்னை நுழையவிடாமல், எனது அறியாமையை பயன்படுத்தி மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டார். பல கோடிகள் வரவு - செலவு கணக்கில் மோசடி செய்து, இன்று எனக்கும்-நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளனர். 

நான் படிக்காதவன் என்பதால், சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உறவினர் ஒருவரை நம்பி வேளைக்கு வைத்தேன். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை, வீடியோ பகிர்வது மற்றும் பிற விஷயங்கள் தொடர்பான தகவலை பகிர்ந்தால், எனக்கு அநீதி நடந்துவிடுமோ என்ற பயத்தில் தெரிந்த நபரை நம்பி, அவரை என்னுடன் வைத்திருந்தேன். தொடக்கத்தில் அவருக்கு 30% எனக்கு 70% பங்கு என பிரித்து வருமானத்தை வைத்தோம். % பிரிப்பு (Share) என்றால் என்ன எனக்கூட எனக்கு தெரியாது. அவர்தான் அதனை அறிமுகம் செய்தார். 

பின்னர் உங்கள் மீனவன் முகநூல் பக்கத்தில் கிடைத்த ஆதரவின் பேரில், உங்கள் மீனவன் மீன் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. அதற்கு ஆலோசனை கொடுத்த அந்த தம்பி, ஏதேதோ கூறி 50 - 50 % என்று கூறினார். மேலும், அதனை தனியார் நிறுவனமாக தொடங்க வேண்டும் என கூறி முதலீடு செய்ய வைத்தார்கள். முதலில் கணக்கு வழக்கை கவனித்து வந்த தம்பி, நேர்மையுடன் செயல்பட்டு வரவு-செலவு, இலாப-நட்டம் என அனைத்தையும் காண்பித்தார். ஒரு வருடம் கழித்து அந்த தம்பி, அவரின் தம்பி நிறுவனத்திற்கு கொரோனா காரணமாக வேலையை இழந்து வந்தனர். 

இவர்கள் வந்து வரவு-செலவுகளை காண்பிக்கவில்லை. பின் மீன் மசாலா தயாரித்து அனுப்பும் பணியை தொடங்கியபோது, அதனையும் அவர்களின் தாய்க்கு கொடுத்துவிட்டனர். இவ்வாறாக என்னை சிறுகச்சிறுக மோசடி செய்தனர். இவர்கள் கூறியதை நம்பி நான் பல இடங்களில் கையெழுத்திட்டேன். இறுதியாக நிறுவனம் தொடங்கப்பட்டபோது எனக்கு 50, தம்பி, அவரின் தம்பி இன்னும் சிலர் சேர்த்து மொத்தமாக 50 ஐ சில மாதங்கள் கழித்து பிரிக்கலாம் என பேசப்பட்டு, இறுதியில் எனக்கு 50 , தம்பிக்கு 50 என இருந்தது. வருடக்கணக்காக உரிய கணக்கு வரவில்லை. 

நான் படிக்கவில்லை என்பதை தெரிந்து கணக்கை மறைத்து மோசடி செய்துள்ளனர். ஒருகட்டத்தில் எனது உடல்நிலை சரியில்லாதபோது இலட்சக்கணக்கில் செலவாகி, ரூ.10 ஆயிரம் பணம் கேட்டதற்கு அவதூறாக பேசினர். நிலைமையை உணர்ந்து அவர்களிடம் வாதமிட்டபோது, என்னை மோசடி செய்து, உன்னால் என்ன செய்ய முடியும் போ என கூறிவிட்டனர். நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து என்னிடம் நஷ்டக்கணக்கு மட்டுமே கூறி வந்தனர். ஒரு கணக்கு வழக்கையும், அந்த முதலில் பார்த்த தம்பியின் பொறுப்பை அவர்கள் பறித்த பின்னர் காண்பிக்கவில்லை. 

இந்த சமயத்தில் உங்கள் மீனவன் என்ற எனது பெயரை பயன்படுத்தி, இவர்கள் சில இடங்களில் பணம், நகை வாங்கி மோசடி செய்வதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனால் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. யாரேனும் எனக்கு உதவி செய்யுங்கள் என கூறியுள்ளார். இந்த விஷயத்திற்கு பலரும் தங்களின் ஆதங்க குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். அவரின் 30 நிமிட விடியோவை பார்த்தால், இப்படியும் ஒரு மனிதனுக்கு நடக்குமா? என்ற அதிர்ச்சி தகவல் பதறவைக்கிறது.

வெள்ளந்தியா இருக்காதடா, கூட இருப்பவன் கூட ஏமாத்திவிடுவான் என வயதானோர் பிள்ளைகளை எச்சரித்து வந்தாலும், உடன் கஷ்டத்தை தெரிந்த நபரே நெஞ்சிலும், முதுகிலும் குத்தப்பட்டதாக உங்கள் மீனவன் கிங்ஸ்டன் குற்றசாட்டு முன்வைத்துள்ளார். 

இதையும் படிங்க: ஓடும் இரயில் மீண்டும் அதிர்ச்சி.. மிதமிஞ்சிய போதையில் பயங்கரம்.. திண்டுக்கல்லில் கொடூரன் கைது.!