நள்ளிரவில் திமுக நிர்வாகி வீட்டில் திடீர் போலீஸ் சோதனை...! என்ன காரணம்? அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற காவல்துறை நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. GEN Z திமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த அன்பானந்தத்தை கைது செய்ய போலீசார் முயன்றதாக கூறப்படும் தகவல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர்
ராயக்கோட்டை போடம்பட்டியில் வசித்து வரும் அன்பானந்தத்தின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக தங்களுடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வு.... இரவோடு இரவாக தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி! அடுக்கடுக்காக சரியும் அதிமுக! அதிர்ச்சியில் எடப்பாடி...!!!
பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
சமூக வலைத்தள பதிவுகள் காரணமா?
தகவலின்படி, அன்பானந்தம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சன கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுவே காவல்துறையின் நடவடிக்கைக்கு பின்னணியாக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
திமுகவினர் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததற்காக அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் காவல்துறை பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மறுபுறம், காவல்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
இதையடுத்து, தவெக மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாவட்ட அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!!