ஓடும் இரயில் மீண்டும் அதிர்ச்சி.. மிதமிஞ்சிய போதையில் பயங்கரம்.. திண்டுக்கல்லில் கொடூரன் கைது.!

தூத்துக்குடி நகரில் இருந்து கோவா நோக்கி பயணம் செய்யும் அதிவிரைவு இரயிலில், சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் தனியாக பயணம் செய்தார். இவர் இரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்துள்ளார்.
அப்போது, அருப்புக்கோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ் குமார் என்பவர், அதிக போதையில் பயணம் செய்து இருக்கிறார். இவர் இளம்பெண்ணுக்கு கொடைரோடு பகுதியில் இரயில் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்: துடைப்பத்தால் அடித்து வரதட்சணை கொடுமை., காதல் திருமணம் செய்த 3 மாத கர்ப்பிணி தற்கொலை..!
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இரயில்வே பாதுகாப்பு காவல்துறைக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, திண்டுக்கல் இரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் இரயில் வந்ததும் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
பெண்ணிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சதீஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் தற்கொலை.. கல்லூரி காதல் கசந்ததால் சோகம்.!