கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
கரும்பலகை விழுந்து 2 மாணவர்கள் தலையில் காயம்; வடலூரில் சோகம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அங்குள்ள சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே, இன்று எட்டாம் வகுப்பு மாணவர்கள், வழக்கம்போல பாடம் பயின்று வந்தனர். அப்போது, கரும்பலகைக்கு கீழே சில மாணவர்கள் அமர்ந்து இருந்தனர்.
இதையும் படிங்க: டிராக்டர் மோதி வீட்டின் முன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்; 4 வயது சிறுமி பலி.!
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், திடீரென கரும்பலகை சரிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில், 2 மாணவர்கள் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் உடனடியாக வடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து வடலூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை; கடலூரில் அதிர்ச்சி சம்பவம்.!