டிராக்டர் மோதி வீட்டின் முன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்; 4 வயது சிறுமி பலி.!



  in Cuddalore 5 Year Old Girl Baby Dies Accident 

கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம் (வயது 40). இவரின் மகள் பிரதிக்சா (வயது 4). சிறுமி பர்கூர், சோரியாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைபள்ளியில் யுகேஜி பயின்று வந்துள்ளார்.

சிறுமி நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் முன்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, பதிவெண் இல்லாத டிராக்டர் ஒன்று, அவ்வழியே பின்னோக்கி வந்தது. சிறுமி சாலையில் இருந்த நிலையில், அவரின் மீது டிராக்டர் மோதியுள்ளது. 

accident

சிறுமி மரணம் உறுதி

இதனால் சிறுமி படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பாகூர் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் மரணத்தை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க: சாகசத்தால் சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்.!

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் அருள்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், டிராக்டர் உரிமையாளரை கைது செய்ய வேண்டி சிறுமியின் உறவினர்கள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: லாரி உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் பரிதாப பலி.!