கிருஷ்ணகிரி: லாரி உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் பரிதாப பலி.!



  in Krishnagiri Bargur Accident 3 Dies

பர்கூர் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில், இன்று 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில், இன்று அதிகாலை நேரத்தில் 05:45 மணியளவில், பர்கூர் - அத்திப்பள்ளம் பகுதியில் மாட்டு வண்டி சென்றுகொண்டு இருந்தது.

அப்போது, அந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற லாரி, பிற 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாகனத்திலும் பயணம் செய்த 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர். 

இதையும் படிங்க: தந்தையின் கண்முன் மகளுக்கு நேர்ந்த சோகம்; பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பயங்கரம்.!

accident

3 பேர் மரணம், 3 பேர் படுகாயம்

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தோர் பர்கூர், கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!