மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தந்தையின் கண்முன் மகளுக்கு நேர்ந்த சோகம்; பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பயங்கரம்.!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கர் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவரின் மகள் ரீனா (வயது 17). சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, மாணவி ரீனா நேற்று டியூசன் சென்றுவிட்டு, பின் மீண்டும் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
பேருந்து சக்கரத்தில் சிக்கி சோகம்
அப்போது, சாலையோரம் இருந்த பள்ளம் ஒன்றில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியது. இவர்களுக்கு பின்னால் பாரத் என்ற தனியார் பேருந்து வேகமாக வந்த நிலையில், அந்த பேருந்துக்கு வழிவிட முயன்றபோது இந்த சோகம் நடந்தது.
இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!
இருவரும் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்ததில், மாணவி ரீனா சாலையின் வலப்பக்கம் விழுந்தார். இதில், இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, மாணவியின் தலையில் ஏறி-இறங்கியது.
இந்த சம்பவத்தில் மாணவி ரீனா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து நிற்காமல் சென்ற நிலையில், உள்ளூர் மக்களால் பேருந்து துரத்தி சிறைபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தென்காசி: 18 வயது சிறுவனுக்கு எமனான நாய்; திடீரென குறுக்கே புகுந்ததால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!