BREAKING: இன்பச் செய்தி... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு! ஒரே நாளில் ரூ. 5,000 வரவு.... முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு !!!
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், வரவிருக்கும் காலத்தில் மேலும் பலப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ரூ.1000-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்வு
தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தல் சூழ்நிலையை காரணமாகக் காட்டி சில தரப்பினர் மூன்று மாதத் தொகையை முடக்க முயற்சித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
மூன்று மாதத் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டது
அத்தகைய முயற்சிகளைத் தடுக்க, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கமாகும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: குஷியோ குஷி! மேலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்வு...? முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!
ஒரே நாளில் ரூ.5000 வரவு
முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தகுதியுள்ள பயனாளிகளின் கணக்குகளுக்கு இன்று ஒரே நாளில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் முன்பணமாக ரூ.3000, கூடுதலாக கோடைக்கால சிறப்பு நிதியாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 இணைந்துள்ளது. இந்த ரூ.5000 வரவு இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சொன்னதைச் செயல்படுத்தியதோடு கூடுதல் நிதியையும் ஒதுக்கியுள்ள இந்த நடவடிக்கை, பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாகப் பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்ற அரசின் உறுதியும் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர்! உயர போகும் மகளிர் உரிமைத் தொகை..? முதல்வர் கொடுத்த முக்கிய அப்டேட்!