அதுப்பாட்டுக்கு ஜாலியா போகுதே.... பீதியில் மக்கள்! 900 பாம்புகளில் இன்னும் ஒன்னு கூட மாட்டல... வெள்ளத்தோடு சீனாவை அச்சுறுத்தும் விஷம்..!!!
சீனாவின் குவாங்ஷி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஹெங்ஜோ நகரின் டெங்வேய் கிராமத்தில் இருந்த தனியார் பாம்பு வளர்ப்புப் பண்ணை வெள்ளத்தில் இடிந்து சரிந்ததால், சுமார் 900 விஷப் பாம்புகள் தப்பிச் சென்றுள்ளன. இதனால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் சென்ற பாம்பு பண்ணை
தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளநீர் பாம்பு பண்ணைக்குள் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தின் வேகத்தை தாங்க முடியாமல் பண்ணையின் கட்டமைப்பு இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு வளர்க்கப்பட்டு வந்த கோப்ரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் வெள்ளநீரோடு வெளியேறி கிராமத்தின் பல பகுதிகளில் பரவின.
சமூக வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி காட்சிகள்
வெள்ளநீரில் கூட்டம் கூட்டமாக பாம்புகள் நீந்திச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஒருபுறம் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம், மறுபுறம் விஷப் பாம்புகளின் நடமாட்டம் என மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியபடி அச்சத்துடன் உள்ளனர். தகவலின்படி, சிலர் பாம்புக்கடிக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல்
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 10 பேர் கொண்ட சிறப்புக் குழு பிரத்யேக வலைகள் மற்றும் மின்சாரக் கருவிகளுடன் சீனா வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்பின், தேவையற்ற காரணங்களுக்காக யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Floods in Guangxi’s Hengzhou just got worse.
900+ snakes escaped a destroyed farm, venomous ones among them.
Locals wading through water now dodging bites, one already hospitalized.
When disaster hits, the secondary threats are brutal.
Stay safe out there. pic.twitter.com/rlmNNZVVtu
— The Great Translation Movement 大翻译运动 (@TGTM_Official) July 7, 2026