BREAKING: அதிர்ச்சி... இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேர் போன படகு நடுக்கடலில் கவிழ்ந்தது! 15 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல்..!!!
வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
18 பேர் மீட்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், தமிழர்கள் உட்பட குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கல் நெச்சையும் கரைய வைக்கும் காட்சி.... ஒரே லைப் ஜாக்கெட்டில் கட்டியணைத்தபடி அம்மா -மகன்! பலத்த காற்றால் படகு விபத்தில் நடந்த கொடூரம்!!!
மத்திய அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு
இந்த விபத்து தொடர்பாக உதவி பெறவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் இந்திய அரசு அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. தேவையுள்ளவர்கள் +84 36 281 7930 மற்றும் +84 91 552 3714 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்களுக்கு தகவல் சேகரிப்பு
இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். உயிரிழப்பு மற்றும் மீட்பு தொடர்பான முழுமையான விவரங்கள் மீட்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மோனியா வாயு கசிவுக்கு இதுதான் காரணமா? பெரியபாளையம் இறால் ஆலையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!!!