#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
தென்காசி: 18 வயது சிறுவனுக்கு எமனான நாய்; திடீரென குறுக்கே புகுந்ததால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!

நாய் ஒன்று வாகனத்தின் குறுக்கே விழுந்ததில், 18 வயது மாணவர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 18). இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: தென்காசி: பட்டா மாத்தணுமா? 10 ஆயிரம் கொடுப்பே.. கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது.!
இதனிடையே, முத்துக்குமார் சம்பவத்தன்று டியூசனுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கீழே விழுந்து மரணம்
அப்போது சாலையில் அவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது, நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்த்துள்ளது. இந்த சம்பவத்தில் நிலை தடுமாறிய முத்துக்குமார், வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார்.
காவல்துறை விசாரணை
இதில், பின்னால் வந்த வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்ததார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
தலைக்கவசம் இல்லை
விசாரணையில், முதற்கட்டமாக மாணவர் தலைக்கவசம் அணியாதது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது. திடீரென நாய் குறுக்கே புகுந்ததால், மாணவர் பதற்றத்தில் பிரேக் அடித்த நிலையில், பின்னால் வந்த வாகனம் அவரின் மீது மோதியது மரணத்திற்கு வழிவகை செய்துள்ளது.
இதையும் படிங்க: Instant Karma: தன்வினை தன்னைச்சுட்ட சோகம்.. சிறுவனை அடிக்க பாய்ந்து, ஆட்டோ விபத்திற்குள்ளாகிய சம்பவம்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!