தென்காசி: பட்டா மாத்தணுமா? 10 ஆயிரம் கொடுப்பே.. கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது.!



in Tenkasi VAO Arrested by Bribery Eruption Department 


தென்காசி மாவட்டத்தில் உள்ள வி.கே புதூர் தாலுகா, ராஜகோபாலப்பேரி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பத்மாவதி. 

இவரிடம் உள்ளூரைச் சேர்ந்த குமரவேல் என்பவர், பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். பட்டா மாற்றம் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என பத்மாவதி கூறியுள்ளார். 

Tenkasi

அதிரடி கைது

இதற்கு ஒப்புக்கொண்ட குமரவேல், திரைமறைவில் தென்காசி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு டக்வல தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் குமரவேலுக்கு அறிவுரை கூறி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: Instant Karma: தன்வினை தன்னைச்சுட்ட சோகம்.. சிறுவனை அடிக்க பாய்ந்து, ஆட்டோ விபத்திற்குள்ளாகிய சம்பவம்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!

தங்களின் திட்டப்படி இன்று காலை ரூ.4500 பணத்தை இலஞ்சமாக கொடுக்க அதிகாரிகள் அனுப்பி வைத்து, அதனை பத்மாவதி வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர். 

இதையும் படிங்க: தென்காசி: குற்றாலம் போறிங்களா? நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை அறிவிப்பு.!