Instant Karma: தன்வினை தன்னைச்சுட்ட சோகம்.. சிறுவனை அடிக்க பாய்ந்து, ஆட்டோ விபத்திற்குள்ளாகிய சம்பவம்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!



in Tenkasi Kadayanallur Auto Accident CCTV Viral 

ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியில், சம்பவத்தன்று மிதிவண்டியில் சிறுவன் ஒருவர் சாலையோரம் வேகமாக சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அவரை பின்தொடர்ந்து ஆட்டோ ஒன்று வருகை தந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை தாக்குவது போல கைகளை நீட்டினார்.

இதையும் படிங்க: தென்காசி: குற்றாலம் போறிங்களா? நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை அறிவிப்பு.!

சிறுவன் நூலிழையில் தப்பித்துக்கொண்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அதிவேகத்தில் ஒரு கைகளால் ஆட்டோவை இயக்கி இருக்கிறார். அப்போது, ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் காயம் அடைந்தார். நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சோகம் ஏற்படவில்லை. 

இந்த விபத்தைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினரால் அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், வீடியோ மட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 6 மாதம் போராடி பிரிந்த தலைமை காவலரின் உயிர்; விபத்தில் சிக்கி நடந்த சோகம்.!