6 மாதம் போராடி பிரிந்த தலைமை காவலரின் உயிர்; விபத்தில் சிக்கி நடந்த சோகம்.!



in Tenkasi Head Constable Dies An Accident 

 

உணவு சாப்பிடச் சென்று விபத்தில் சிக்கிய தலைமை காவலர், 6 மாதகால சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் தென்காசியில் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆசாத், பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் சையத் அலி (வயது 40). இவர் கடையநல்லூர், அச்சன்புதூர் காவல் நிலையத்தில், முதல்நிலை தலைமை காவலராக வேலைபார்த்து வருகிறார். தற்போது மாவட்ட காவல்துறை தனிப்படை பிரிவில் இருக்கிறார். 

இதையும் படிங்க: மலையில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்; பரிதாப பலி.!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி அன்று, இரவு நேரத்தில் பணியை முடித்துக்கொண்ட சையத் அலி, இருசக்கர வாகனத்தில் கடையநல்லூரில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்படும் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது, எதிர்திசையில் வந்த வேறொரு இருசக்கர வாகனம் மோதியது. 

Tenkasi

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இந்த விபத்தில் படுகாயமடைந்த காவலர், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு பல மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் அவரின் உடல் சொந்த ஊரான தென்காசிக்கு கொண்டு வரப்பட்டது. 

சொந்த ஊருக்கு வந்த காவலரின் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணை கமிஷனர் வேணுகோபால், தமிழ் இனியன் மற்றும் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசலில் காவல்துறையினர் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடனே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் மரணம்; பெற்றோரை பார்த்த ஆவலில், அடுத்த நொடி நடந்த சோகம்.!