கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
தென்காசி: குற்றாலம் போறிங்களா? நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை அறிவிப்பு.!

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு
இதனை முன்னிட்டு நேற்று இரவு முதலாக தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், குற்றாலம் அருவிகளில் நீர் அதிக வரத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: 6 மாதம் போராடி பிரிந்த தலைமை காவலரின் உயிர்; விபத்தில் சிக்கி நடந்த சோகம்.!
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பழைய அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதித்து உத்தரவிட்டு இருக்கின்றனர். மேலும், மணிமுத்தாறு அருவியில் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாகவே நீர் வரத்து காரணமாக சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நெல்லை - களக்காடு தலையணை அருவியில் குளிக்கவும் தடை விதித்து உத்தரவிப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலையில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்; பரிதாப பலி.!