ஆவடியில் நேர்ந்த சோகம்... மகனின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்.!unable-to-bear-the-loss-of-their-sons-life-the-couple-c

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், ராமாபுரம் பகுதி சேர்ந்தவர் தனசேகர்- பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு ஹரிஷ் என்று மகன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். ஹரிஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது.

இந்நிலையில் இவர்களது மகன் உயிர் இழப்பை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து உள்ளனர் தனசேகர்- பூங்கொடி தம்பதியினர். இந்நிலையில் தனசேகரின் தாயார் பூங்காவனம் நேற்று இவர்களை பார்ப்பதற்காக தனசேகர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனசேகர்- பூங்கொடி இருவரும் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர்.

Sucide

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரின் தாய் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தம்பதி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனது மகனின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தனசேகர்- பூங்கொடி தம்பதியினர் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்தது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.