மாணவ- மாணவிகளிடையே தளபதி விஜய்யின் பரபரப்பு பேச்சு.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா.!!

மாணவ- மாணவிகளிடையே தளபதி விஜய்யின் பரபரப்பு பேச்சு.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா.!!



udhayanidhi-stalin-answer-about-vijay-speech

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை இன்று சந்தித்தார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சார்பில்  மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்  வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய தளபதி விஜய், வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கல்விதான் ஒருவரது பறிக்க முடியாத சொத்து.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.உங்களது தனிப்பட்ட அடையாளத்தை விட்டுவிடாதீர்கள் என கூறியிருந்தார். மேலும் அவர் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டுவிடுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். ஆனால், நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்திகொள்வது கேள்விபட்டுள்ளீர்களா? அதுதான்  பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.

ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள். அப்போ 15 கோடி ரூபாய் செலவாகிறது. அப்படியென்றால் அவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் யோசித்து பாருங்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். நீங்கள் கூறினால் நடக்கும் என கூறியிருந்தார்.

vijay

தளபதி விஜய்யின் இந்த பேச்சு அதிகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வியெழுப்பிய நிலையில் அவர், வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லதுதானே கூறியுள்ளார். அதில் உங்களுக்கு ஏதும் பிரச்னையா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், யார் வரகூடாது என கூற யாருக்குமே உரிமையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.